-பா.பிரதீபன்-
அச்சுவேலி மத்திய சன சமூக நிலையத்தில் விசேட வைத்திய நிபுணர்களின் பங்கேற்புடன் நேற்று இலவச மருத்துவ முகாமொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மருத்துவ சங்கம், யாழ்ப்பாண மருத்துவ பிரதிநிதிகள் சங்கம் மற்றும் அச்சுவேலி மத்திய சன சமூக நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்ற மருத்துவ முகாமில் வைத்திய ஆலோசகர்கள் குழந்தை மருத்துவ நிபுணர்கள், கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள், தோல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதில் நோயர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டதுடன், பரிந்துரைக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. குறித்த மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.















