டித்வா புயல் தாக்கத்தையடுத்து, நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டியும் , பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டியும் கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலயத்தில் பிரார்த்தனை இடம்பெற்றது.
சபரீச ஐயப்பன் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை விசேட புஷ்பாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்கார பூஜைகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. அதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
















