-சொ.வர்ணன்-
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அன்று கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தகவல் தருகையில், துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடம் மற்றும் வாகனம் போன்றவற்றை நேரடியாக பார்வையிட்டு தடயங்கள் சிலவற்றை பெற்றிருக்கிறோம். அதேசமயம் உயிரிழந்த நபரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களிடமும் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதேசமயம் உயிரிழந்த நபரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை கிடைக்க பெறாத நிலையில் அந்த அறிக்கை கிடைத்ததும் அது தொடர்பில் மேலதிக கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


















