-ஞானத்தமிழ்-
யாழ்ப்பாணக் கல்வி வலயத்தால் தரம் 6 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புத் தொடர்பாக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் செயலமர்வுகளை நடாத்திவருகின்றது.
இச் செயலமர்வில் எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 30 திகதி வியாழக்கிழமை வரை 3 தினங்கள் யாழ்ப்பாணக் கல்வி வலய கணணி வளநிலையத்தில் 2026 ஆண்டு தரம் 6 இற்கு தகவல் தொடார்பாடல் தொழில்நுட்ப பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெறவுள்ளது
எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 30 திகதி வியாழக்கிழமை வரை 3 தினங்கள் யா.கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் 2026 ஆண்டு தரம் 6 இற்கு சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெறவுள்ளது
இச் செயலமர்வு இத் தினங்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை நடைபெறவுள்ளதாகவும், உரிய ஆசிரியர்களை செயலமர்வுகளில் பங்கு பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


















