பிரமிக்க வைக்கும் வடக்கு கல்வி அமைச்சு
-சொ.வர்ணன்-
கிளிநொச்சி வலயம் ஒன்றில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபராக அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட ஒருவருக்கு ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஆசிரியர் இடமாற்றத்திற்கு பெயர் பரிந்துரைக்கப்பட்ட அதிபர் இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிபராக கிளிநொச்சி வலயத்திற்கு சென்றுள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வகையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் ஆசிரிய இடமாற்றத்தில் முறைகேடுகள் இருப்பதாக வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


















