-கஜிந்தன்-
வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்வுகள் வரிசையில் நேற்று இணையவழி வாசிப்பை ஊக்குவிப்பதற்கான செயற்பாடு இடம்பெற்றது.
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சில் செயற்படுத்தப்படும் Room to Read செயற்றிட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் காரைக்கவி கந்தையா பத்மானந்தன் அதிதியாக கலந்து கொண்டார்.
இதன் போது இணையவழி அறிவுத் தேடலின் முக்கியத்துவம் பற்றிய ஆவணக் காணொளியை விசேட கல்வி ஆசிரிய மாணவி நுஸ்லா சாஜஹான் காட்சிப்படுத்தினார்.
தமிழ்த்துறை விரிவுரையாளர் வேல் நந்தகுமார் அதிதிக்கான அறிமுக உரையை ஆற்றினார்.
இணைய வழி வாசிப்பு என்ற தலைப்பில் இரண்டாம் வருட உடற்கல்விநெறி ஆசிரிய மாணவி உசாந்தினி விமல்ராஜ் உரை ஆற்றினார்.
வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக அனைவருக்கும் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன், கலாசாலை முகாமைத்துவ குழுவினரால் காரைக்கவி கந்தையா பத்மானந்தன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


















