-செ.ரவிசாந்-
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதன் ஒன்று கூடல் நிகழ்வு கலாசாலையின் ஆங்கிலநெறிப் பிரிவினரின் ஏற்பாட்டில் கலாசாலை முதல்வர் ச. லலீசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அண்மையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்ற ஆங்கிலத்துறை விரிவுரையாளர் தம்பிப்பிள்ளை மோகன் அதிதிப் பேச்சாளராகக் கலந்து கொண்டு உரை ஆற்றினார். ஆங்கிலத் துறை விரிவுரையாளர் வசந்தி வைத்திலிங்கம் அதிதிக்கான அறிமுக உரையை நிகழ்த்தினார்.
வாசிப்பின் முக்கியத்துவம் பற்றிய ஆவணக் காணொளியை ஆசிரிய மாணவி கௌசிகா நிரோஜன் காட்சிப்படுத்தினார். பாடப் புத்தகத்திற்கு அப்பால் வாசிப்பை மேம்படுத்துவோம் எனும் தலைப்பில் கலாசாலையின் இரண்டாம் வருட ஆங்கிலநெறி ஆசிரிய மாணவி தர்மினி சம்பத்குமார் உரை ஆற்றினார்.
நிகழ்வுகளை கலாசாலையின் இரண்டாம் வருட ஆங்கிலநெறி ஆசிரிய மாணவி லிஜானி டேவிட் முன்னிலைப்படுத்தினார்.


















