யாழ்ப்பாணம், பாசையூர் பகுதியில் 16ஆம் திகதி வியாழக்கிழமை 35 கிலோ 400 கிராம் எடையுடைய ஆமை இறைச்சியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















