-சி.ஜெகதீஸ்வரன்-
ஆறுகால்மடம் மண்டபத்தில் இருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கனகரத்தினம் துரைசிங்கம் (வயது-67) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்.
நேற்று புதன்கிழமை ஆறுகால் மடத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்படுவதாக அப்பகுதி மக்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர்.


















