செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை அகழ்வதற்காக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 45 நாட்கள் இன்றுடன் நிறைவடைகின்றது.
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் மேலும் என்புக் கூடுகள் காணப்படக் கூடும் என நீதிமன்றத்திற்கு ஏற்கனவே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய அகழ்வுக்காக எட்டு வாரங்கள் கால அவகாசம் தேவைப்படுவதாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா அறிக்கையிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தின் கட்டளை இன்றைய தினம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இதுவரை இந்தப் புதைகுழியில் இருந்து 240 மனித என்புக்கூடுகள் வெளிப்பட்டிருக்கின்றன. அவற்றில் 235 என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


















