-செ.ரவிசாந்-
இலங்கை மின்சார சபையின் 56 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு குருதிக்கொடைமுகாம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9மணி தொடக்கம் பிற்பகல் 2மணி வரை சுண்டுக்குழி, பழைய பூங்கா வீதியிலுள்ள இலங்கை மின்சார சபையின் வடக்கு மாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம் இலங்கை மின்சார சபையின் வடமாகாண ஊழியர் நலன்புரிச் சங்கம் மற்றும் விளையாட்டுச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.


















