இலாப நோக்கத்தை மட்டும் இலக்காகக் கொள்ளாது தீவக மக்களின் நலன்களையும் இலங்கை போக்குவரத்து சபை கருத்தில் எடுக்கவேண்டும் என வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
வேலணை இரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றபோது, மாணவர்களது போக்குவரத்து இடர்பாடுகள் குறித்து பெரும் கடும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை சாலையின் வழித்தடம் 780 இலக்கம் கொண்ட இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவையை, பாடசாலை மாணவர்களின் நலன் கருதி அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, குறித்த இலக்கத்தில் இதுவரை இ.போ.ச தனது சேவையை முன்னெடுக்கவில்லை. எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்காமையே காரணம் என அவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.
ஆனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மக்களின் தேவையை வருமான இழப்பையும் கருத்தில் கொள்ளாது முன்னெடுக்கின்றனர். அது மட்டுமல்லாது, மாணவர்களின் நலனிலும், மிகக் குறைந்த கட்டணத்தை அறவிட்டு அதிக அக்கறை செலுத்துகின்றது.
அத்துடன், வழித்தடம் 780 தனியார் சேவை மணவர்களின் கோரிக்கையின் பிரகாரம் பாடசலை ஆரம்பிக்கும் மற்றும் நிறைவுறும் நேரங்களில் மேலதிக சேவை ஒன்றயும்.முன்னெடுத்து வருகின்றது. அதற்கு அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.
இதேவேளை இ.போ.ச, வழித்தடம் 776, வழித்தடம் 777 ஆகியவற்றில் சேவையை முன்னெடுக்கின்றது. குறிப்பாக வழித்தடம் 776 ஐ முன்னெடுக்க போட்டிபோடுகின்றது. இதனூடாக இ.போ.ச வருமானத்தை மட்டும் தான் இகக்காக கொண்டுள்ளது என்பது புலனாகின்றது.
மாணவர் ஆசிரியர்களினது மட்டுமல்லாது உத்தியோகத்தர்களது போக்குவரத்து தேவைப்பாட்டுக்கான பேருந்துகள் இன்னமும் தேவையாக இருக்கின்றது. எனவே, எமது பகுதியில் மக்கள் சேவையை முன்னெடுக்கும் தனியாருடன் இ.போ.சவும் தனது பங்களிப்பை இலாப நோக்கம் மட்டும் கொண்டதாக இல்லாது முன்னெடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.


















