-த.கலைஅமுதன்-
யாழ்.மாநகர சபை நடவடிக்கையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் (சைக்கிள்) சுவீகரன் நிஷhந்தன் பங்கேற்க யாழ்.மாநகர முதல்வரால் ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன்போது நடைபெற்ற வாதப்பிரதிவாதங்களின் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினர் வசீகரனுக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் சு.நிஷாந்தனுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது உறுப்பினர் நிஷhந்தன் தன் அருகில் வந்து தன்னை அச்சுறுத்தியதாகவும் இதற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர் வசீகரன் சபையில் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது முதல்வர் உறுப்பினர் நிஷhந்தனுக்கு சபை நடவடிக்கையில் ஒரு மாதம் பங்கேற்க தடை விதிப்பது தொடர்பாக சபையின் யோசனையை கேட்டார்.
இரு தரப்பு விளக்கத்தையும் செவிமடுத்து நடவடிக்கை எடுக்குமாறும், ஒரு தலைப்பட்சமாக செயற்பட வேண்டாம் என பல உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்த போதும் முதல்வர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
இதனையடுத்து ஏனைய உறுப்பினர்களுக்கு முன் எச்சரிக்கையாக உறுப்பினர் நிஷாந்தனுக்கு ஒரு மாதம் சபை நடவடிக்கையில் இருந்து பங்கேற்க தடைவிதிப்பதாக உத்தரவிட்டார்.


















