-சப்தசங்கரி-
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன பிள்ளைகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை உடுவில் நடைபெற்றது.
திருச்சபை ஆளுகையில் உள்ள உடுவில் மகளீர் கல்லூரி மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு அதி வணக்கத்துக்குரிய பேராயர் வே. பத்மதயாளன் தலைமையில் நடைபெற்ற குறித்த விழாவில் பிள்ளைகள் வழிபாடு நடைபெற்றது.

இதனையடுத்து திருச்சபை நடை பவணி இடம்பெற்றதுடன், குழுப்பாடல், வேதாகமாப் புதிர், பேச்சு, தனிப்பாடல், கட்டுரை, சித்திரம் உள்ளிட்ட பல போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.
போட்டியின் நிறைவில், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.



















