நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து, பிரியாணி, முட்டை, ரொட்டி உள்ளிட்ட முக்கிய உணவுகளின் விலை 25ரூபாவால் குறைக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்ஸான் அறிவித்துள்ளார்.
மேலும் அனைத்து வகையான சிற்றுண்டி உணவுகளின் விலைகளும் 10ரூபாவால் குறைக்கப்படும் எனவும், உணவுகளின் விலைக் குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும் எனவும் உணவக உரிமையாளர்களை கேட்டுக்கொண்டார்.


















