-செ.ரவிசாந்-
தொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவித் தொழில் ஆணையாளராக திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழில் அமைந்துள்ள மாவட்டத் தொழில் திணைக்கள அலுவலகத்தில் தனது கடமையை உத்தியோகபூர்வமாகப் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொழும்பு தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் (நிர்வாகம்) செல்வி.இரேஷா உதயங்கனியிடமிருந்து கடந்த புதன்கிழமை உதவித் தொழில் ஆணையாளராக நியமனக் கடிதம் பெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே நேற்று முன்தினம் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.
ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மயிலணியை வசிப்பிடமாகவும் கொண்டுள்ள திருமதி.ராஜமல்லிகை முன்னர் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றியிருந்ததுடன் பின்னர் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















