-ஞானத்தமிழ்-
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் ஆளுகைக்கு உட்பட்ட அழைக்கப்பட்ட கழகங்களுக்கான கொலின்ஸ் நினைவுக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் போட்டிகள் நாளை புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டித் தொடர் எதிர்வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை வரை தினமும் இரு போட்டிகள் வீதம் நடைபெறவுள்ளதுடன், இத்தொடரில் 24 விளையாட்டுக் கழக அணிகள் பங்குபற்றவுள்ளன.















