-கடலோடு செல்லும் மீன்பிடி உபகரணங்கள்-
-அன்ரனி திலக்-
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி து/435 கிராம சேவையாளர் பிரிவான சுண்டிக்குளம் பகுதியில் கடல் அரிப்பின் தாக்கம் அதிகரித்துவருகின்றது.
குறித்த சுண்டிக்குளம் கிராமத்தை கடந்த வருடம் 28.11.2025 டிட்வா புயல் கடுமையாக தாக்கியது. இதனால் முழுமையாக குறித்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்றொழிலாளர்களின் பெறுமதிவாய்ந்த தொழில் உபகரணங்களும், இருப்பிடங்களும், கரையோர தென்னங்காணிகளும் அழிவடைந்துள்ளது.
டிட்வா புயலின் சீற்றம் காரணமாக கடல் 150 மீற்றர் தூரத்திற்கும் அதிகமாக உட்புகுந்த வண்ணமே உள்ளது. இவ்விடயத்தினை அரச அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரைக்கும் யாரும் வந்து பார்வை இடவில்லையென அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


















