-ஞானத்தமிழ்-
தொல்புரம் கமநல சேவை நிலையத்தினால் 2025/2026 பெரும்போகத்தில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இலவசமாக எம்.ஓ.பி. பசளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது.
இக் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட அனைத்து கமக்கார அமைப்பிற்குட்பட்ட விவசாயிகளும் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், 1ஹெக்டேயருக்கு (60 பரப்பிற்கு) 25 கிலோகிராம் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இவ் இலவச பசளை பெற்றுக்கொள்ள வரும் விவசாயிகள் 2025 ஆண்டுக்கான ஏக்கர் வரி பற்றுச்சீட்டு,கமக்கார அமைப்பில் சந்தா கட்டிய பற்றுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை கொண்டு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


















