-ஞானத்தமிழ்-
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராக இருந்த அமரர் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரின் நூற்றியோராவது பிறந்ததின விழாவும் அறக்கொடை வழங்கலும் எதிர்வரும் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி அன்னபூரணி மண்டபத்தில் தேவஸ்தான தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட வைத்தியநிபுணர் சி.ரகுராமன் மற்றும் வைத்திய கலாநிதி திருமதி ஜனகா ரகுராமன் தம்பதிகள் பிரதம விருந்தினர்களாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா மற்றும் திருமதி சிவநயனி சர்வேஸ்வரா தம்பதியினர் சிறப்பு விருந்தினர்களாகவும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி ஏ.தேவநேசன் மற்றும் தெல்லிப்பழை கோட்டக்கல்விப் பணிப்பாளைர் வே.அரசகேசரி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம்முறை சிவத்தமிழ் விருது வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் கலாநிதி சமாதிலிங்கம் சத்தியசீலன், மிருதங்க வித்துவான் மா.சிதம்பரநாதன், இளைப்பாறிய அதிபர் திருமதி.ஆனந்தி சிவஞானசுந்தரம், இளைப்பாறிய மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் .எ.சின்னத்தம்பி, மற்றும் தவில் வித்துவான். சு. இராமதாஸ் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளதுடன் அறக்கொடை நிதி தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவுக்கான நிதியுதவி மற்றும் தெல்லிப்பழை கல்விக் கோட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கான கல்வி உதவி என்பன வழங்கப்படவுள்ளன.


















