யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகில் கடும் பதற்றமான சூழல் நிலவியது.
யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக அங்கிருக்கும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில், போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதன்போது, மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை பொலிஸார் தள்ளி வீழ்த்த முற்பட்டனர்.
இதனையடுத்து மக்கள் கடும்எதிர்ப்பை வெளியிட்டனர்.
பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடுவீதியில் அமர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பினர்.


















