-செ.ரவிசாந்-
வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி வெள்ளி உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜை வழிபாடுகள் நடைபெற்றதையடுத்து சுவாமி உள்வீதி வலம் வரும் திருக்காட்சி இடம்பெறவுள்ளது.


















