-சொ.வர்ணன்-
திருநெல்வேலி பகுதியில் ஐஸ் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக் கைது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
யாழ். திருநெல்வேலி பகுதியில் போதைப்பொருளுடன் இருவர் நடமாடுவதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இருவரையும் சோதணை செய்த போது, அவர்களிடம் இருந்து 160 மில்லிகிராம் ஜஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த குற்றத்தடுப்பு பொலிஸார் அவர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















