-கஜிந்தன்-
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஒருங்கிணைப்பு குழத் தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதனுக்கு மண்டபத்தின் முன்பக்கத்தில் வலது புறமாக ஆசனம் ஒதுக்கப்பட்டது.
இதன்போது குறித்த ஆசனத்தில் அமர்வதால் தன்னால் கூட்டத்தை தலைமை தாங்குபவரது முகத்தை சரியாக பார்க்க முடியாது உள்ளதாகவும், ஆசனத்தை மாற்றுமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது மேடையில், பிரதேச செயலருக்கு அருகாமையில் ஆசனம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த இடத்தில் அமர வைக்க முடியாது என்றும், மேடைக்கு முன்பாக ஆசனம் ஒதுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்;சுனா தெரிவித்தார். இதன்போது அங்கே குழப்பநிலை ஏற்பட்டது. பின்னர் தவிசாளருக்கு மேடைக்கு முன்பாக ஆசனம் வழங்கப்பட்ட நிலையில் கூட்டம் நடைபெற்றது.


















