யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வதேச விருதுபெற்ற ஆவணப்பட புகைப்படக் கலைஞர் தர்மபாலன் ரிலக்சனின் புதிய புகைப்படக் கண்காட்சி “Shadows of the Past” அக்டோபர் 08 முதல் 12 வரை யாழ்ப்பாணம், கலம் (No.50, கண்டி வீதி) என்ற கலாசார மையத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சி இலங்கையின் உள்நாட்டுப் போருக்குப் பிறகு நிலம், வீடுகள், மக்களின் நினைவுகளில் பதிந்த காயங்களையும் அமைதியான நினைவுகளையும் பதிவு செய்கிறது.
போரின் நேரடி காட்சிகளுக்கு அப்பால், அதன் நிழல்களில் வாழும் மக்களின் உணர்வுகளையும் மனநிலையையும் திலக்சன் தனது புகைப்படங்களின் வழியே வெளிப்படுத்துகிறார்.
“வரலாறு தேதிகளும் நிகழ்வுகளும் மட்டும் அல்ல; அது மனிதர்களிலும் நிலத்திலும் அழியாத அடையாளங்களை விட்டுச் செல்கிறது,” என ரிலக்சன் கூறினார்.




























