-சொ.வர்ணன்-
யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் அமைந்துள்ள வீதி சமிக்ஞை மின்விளக்கின் மின்சாரத்தை இலங்கை மின்சார சபை நேற்று திங்கட்கிழமை மாலை துண்டித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பராமரிப்பில் உள்ள கோப்பாய் சந்தி மின் சமிக்ஞை விளக்குக்கான மின்சார கட்டணம் நிலுவையில் உள்ள நிலையில் மின்சார சபை குறித்த மின்னினைப்பை துண்டித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் புத்தூர் பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன் கருத்து தெரிவிக்கையில்:-
குறித்த மின்விளக்கு அமைந்துள்ள சந்தியானது மிகவும் வாகன நெரிசல் மிக்க அதிகளவான பாரவூர்திகள் கடந்த செல்லும் சந்தியாக காணப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த சந்தியில் விபத்து ஒன்றும் பதிவாகி இருந்தது.
இவ்வாறான ஒரு நிலையில் இரண்டு திணைக்களங்களும் அரச திணைக்களங்களாக காணப்படுகின்ற நிலையில் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை விளங்கிக் கொள்ளாமல் மின்சாரத்தை துண்டித்தமை கண்டிக்கத்தக்க விடயம் என்றார்.


















