-செ.ரவிசாந்-
யாழ்.மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் வலிகாமத்தின் பல பகுதிகளிலும் விவசாய நிலங்களில் அதிகளவு மழை வெள்ளநீர் தேங்கி நின்றமையைக் காண முடிந்தது.
இதனால், வெங்காயம், மிளகாய், கரட், பீற்றூட், கோவா உள்ளிட்ட மரக்கறிச் செய்கைகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.


















