இலங்கையின் மஞ்சி சூப்பர் லீக் கரப்பந்தாட்டப் போட்டித் தொடர் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இப்போட்டித் தொடரில் இலங்கை பல்கலைக்கழக அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் தெரிவாகியுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இறுதியாண்டு மாணவர்களான அருமைநாதன் திருச்செல்வம் மற்றும் அப்துல் முனாப் மொஹமட் ஜெரார், இணைந்த சுகாதார பீடத்தின் உடற்கல்வி பிரிவின்; ரவீந்து மெண்டிஸ் ,முகமது அஸ்ரப்கான் முகமது அசீத், ரமேஸ்குமார் பிரவீன் டிலக்சன் ஆகியோரே இவ்வாறு தெரிவாகியுள்ளனர். அவர்களில் திருச்செல்வம், ஜெரார், அசீத் ஆகிய மூன்று மாணவர்கள் இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் தேசிய கரப்பந்தாட்டப் போட்டிகளில் மிகவும் சிறந்ததாகக் கருதப்படும் இப் போட்டித் தொடரில் இராணுவம், கடற்படை, விமானப்படை போன்ற பலம் வாய்ந்த அணிகளுக்கு இணையாக, இலங்கை பல்கலைக்கழக விளையாட்டுக்கழகம் சார்பாகப் பல்கலைக்கழக அணியும் கலந்துகொள்ளவுள்ளது.


















