-க.கனகராசா-
கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு எலிக் காய்ச்சலுக்கான முற்தடுப்பு மருந்து கிராம மட்ட உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
அத்துடன் வதிவிடங்களில் வயல் தண்ணீர் பாதிப்புள்ளோருக்கும் கரவெட்டி பொது சுகாதார பரிசோதகர் மூலம் வழங்கப்பட்டது.
கரவெட்டி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகரினால் பொதுமக்களுக்கான அறிவித்தலும் வழங்கப்பட்டுள்ளது.
வயல்களில் வேலை செய்யும் விவசாயிகள், சேற்று நிலங்களில் பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுபவர்கள், வயல் வெளிகளில் செங்கல் தயாரித்தல் அல்லது மணல் அள்ளுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், இரத்தினக்கல் சுரங்கத் தொழிலாளர்கள், சேற்று நிலம் அல்லது நீர் தேங்கிய இடங்களில் விளையாட்டு மற்றும் ஏனைய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் எலிக்காய்ச்சல் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மருந்துகளை சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொதுச் சுகாதார பரிசோதகரின் ஆலோசனையுடன் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
















