-கஜிந்தன்-
தமிழறிஞரும், யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபருமாகிய கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளையின் நூற்றாண்டையொட்டி வடமாகாண பாடசாலைகளிடையே விவாதச் சுற்றுப்போட்டி ஒன்றை யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம் நடத்தவுள்ளது
இப்போட்டியில் பங்குபற்றும் ஆர்வமுடைய பாடசாலைகள் போட்டியாளர், முழுப்பெயர், பொறுப்பாசிரியர் பெயர், தொலைபேசி இலக்கம் என்பவற்றைக் குறிப்பிட்டு தமது பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தலுடன் எதிர்வரும் 8.11.2025 இற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக பொதுச் செயலாளர், யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், இல. 28, குமாரசாமி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு தமிழ்ச்சங்க செயலாளர் கோரியுள்ளார்.
மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் போட்டி இணைப்பாளரின் 0759556041 , 0767556041 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும், தேசிய மட்டத் தமிழ்த்தினப் போட்டிகளின் சுற்றுநிருபத்தைத் தழுவிய நிலையில் நவம்பர் மாத இறுதியில் போட்டிகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















