வடக்கு மாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் “அலையோடு உறவாடு” என்ற தொனிப் பொருளில், உணவு திருவிழா ஆரம்பமாகியது.
காங்கேசன்துறை கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகி இரவு வரையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளுர் உற்பத்தி பொருள் விற்பனை, பண்பாட்டு நிகழ்வுகள், சிறுவர்களுக்கான மகிழ்வூட்டும் விளையாட்டுக்கள் மற்றும் இன்னிசை இசைக்கச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கியது.


















