–சி.ஜெகதீஸ்வரன்-
யாழில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றியவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தனபாலசிங்கம் ரேணுகாதரன் (வயது-49) என்பவராவார்.
குறித்த நபருக்கு 27 ஆம் திகதி வியாழக்கிழமை காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் ஓய்வெடுத்துள்ளார்.
மறுநாள் வெள்ளிக்கிழமை மயங்கிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிசார் நெறிப்படுத்தினர்.


















