-சொர்ணலிங்கம் வர்ணன்-
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு கிழக்கில் நடந்த சில விரும்பத்தகாத சம்ப வங்கள் காரணமாக அமைந்தன என சமூக செயற்பாட்டாளர் செல்வின் கூறியுள்ளார்.
தந்தை செல்வா கலையரங்கில் நேற்று நடைபெற்ற தமிழ் – முஸ்லிம் நட்புறவை கட்டியெழுப்பும் கலந் துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் காரணமாக அங்கிருந்த சிலரின் வேண்டுகொளால்,
வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதுதான் உண்மையான வரலாறு. இந்த வெளியேற் றத்தை தலைவர் பிரபாகரன் எழுத்துமூலமாக அங்கீகரிக்கவில்லை.
பிற்காலத்தில் முஸ்லிம் மக்களை திரும்பி வந்துவிடுமாறு எழுத்துமூலமாக தலைபர் பிரபாகரன் கோரிக் கை விடுத்தார். ஆது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது.
தலைவர் பிரபாகரன் அதிகாரத்தில் இருந்தபோதே அந்த அழைப்பை விடுத்தார். ஆனாலும் யாழ்ப்பாண த்திற்கு முஸ்லிம் மக்கள் வருவதற்கு உத்தரவாதம் வழங்க முடியாது எனவும் கூறினார்.
காரணம் அப்போது யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. இப்போது முஸ்லிம் ம க்களை தடுப்பது அரசியல் அதிகாரமே தவிர கடந்தகால வரலாறுகள் அல்ல.
அதனை முஸ்லிம் மக்கள் நன்றாக விளங்கிக் கொண்டுள்ளனர். தமிழ் – முஸ்லிம் அரசியல் தலைவர் கள் தங்கள் அரசியல் இருப்புக்காக இரு மக்களிடையேயும் விரிசல்களை வளர்க்கிறார்கள்.
அழைக்கவேண்டியவர்கள் உரிய நேரத்தில் அழைத்துவிட்டனர். முன்னிப்பும் வழங்கப்பட்டுவிட்டது. முஸ் லிம் மக்கள் புரிந்துகொண்டால் சரி என்றார்.















