யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்குப் பகுதியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் (24.11.2026) காலை 10 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
குடத்தனை வடக்கு மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடைய உறவினர்கள் மங்கள வாத்திய இசையுடன் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி மரியாதையுடன் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தாயக விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் நினைவாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.


















