-பொதுமக்கள் விசனம்-
யாழ்.கல்லுண்டாய் – கொத்துக்கட்டி வெளி பகுதியில் கண்மூடித்தனமாக கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில் மானிப்பாய் பிரதேசசபை வேடிக்கை பார்ப்பதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம் – பொன்னாலை வீதியிலிருந்து நாவாலி – அரசடிக்கு செல்லும் கொத்துக்கட்டி வெளி வீதியின் இருமருங்கும் பற்றைகள் வளர்ந்து கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது.

இதனை சாதகமாக பயன்படுத்தி வழிப்பறி கொள்ளையர்கள் இந்த பகுதி ஊடாக பயணம் செய்யும் பொது மக்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவதுடன், வெளியிடங்களில் இருந்து வாகனங்களில் கழிவுகளை கொண்டு வந்து வீதியின் இருமருங்கிலும் கொட்டிச் செல்கின்றனர்.

குறிப்பாக வீட்டு கழிவுகள் மட்டுமல்லாமல், கடைக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மனிதக் கழிவுகளும் கூட கொட்டப்படுவதால் இவ் வீதி ஊடா ன பயணம் அசௌரியமானதாக மாறியுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் பொறுப்புவாய்ந்த மானிப்பாய் பிரதேசசபை உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும், இந்த வீதிக்கு வீதி விளக்குகளை பொருத்தி தரவேண்டும் எனவும், மக்கள் கேட்டுள்ளனர்.






























