-ஞானத்தமிழ்-
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் 203 ஆவது குருபூசையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினர் மாணவர்களிடையே பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டியினை நடாத்தவுள்ளன.
இப் பேச்சுப் போட்டி மாணவர்களிடையே தரம் 7 முதல் தரம் 8 வரை கீழ் பிரிவாகவும் ‘ நாவலர் எழுந்தார் ‘ எனும் தலைப்பிலும், தரம் 9 முதல் தரம் 11 வரை மத்திய பிரிவாகவும் ‘வண்ணை நடு’ என்னும் தலைப்பிலும் தரம் 12 மற்றும் தரம் 13 மேற்பிரிவாகவும் ‘ ஈழத்தில் சைவமறுமலர்ச்சியும் நாவலைரின் வரலாற்றுப்பாத்திரமும் ‘ என்ற தலைப்பிலும் நடைபெறவுள்ளது.
கட்டுரைப் போட்டி தரம் 12 மற்றும் தரம் 13 மேற்பிரிவுக்கும் நடைபெறவுள்ளதுடன் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விபரங்களை எதிர்வரும் 24 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்பாக. ‘ செயலாளர் , சைவ பரிபாலன சபை, இல.66, கல்லூரி வீதி ,நீராவியடி ,யாழ்ப்பாணம் .’ என்னும் முகவரிக்குக் கிடைக்கக்கூடியதாக அதிபரின் சிபார்சுடன் அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

















