-த.சுபேசன்-
கொடிகாமம் மாவீரம் துயிலும் இல்ல முன்றலில் மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவீரர்களுக்கு அக வணக்கம் செலுத்தி சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.
இதில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களான செ. மயூரன், சி.பிரபாகரன், சுதாகரன் மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

















