கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில், பெருந்தொகையான போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 600,000 போலி அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

















