பிலிப்பைன்ஸின் மின்டானோ தீவில் ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவிதமான சுனாமித் தாக்கமோ அல்லது ஆபத்தோ இல்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
















