-ஞானத்தமிழ்-
கோப்பாய் கண்ணகை அம்மன் கோவிலடி சனசமூக நிலையம் மற்றும் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று திங்கட்கிழமை காலை 6 மணிக்கு சனசமூக முன்றலில் இடம்பெறவுள்ளது.
இதில் யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பிரதம விருந்தினராகவும,; முன்னாள் கிராம அலுவலர் சு.சண்முகவடிவேல் மற்றும் கிராம அலுவலர் திருமதி சு.நித்தியா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.


















