-தி.கஜலக்சன்-
சங்கானை மக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வு சங்கானை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
முதலில் மாவீரர் பெற்றோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ச.ஜயந்தன், பிரதேச சபை உறுப்பினர்கள், மாவீரர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலரும் மக்கள் கலந்து கொண்டனர்.


















