-வி.சக்திவேல்-
வலிகாமம் மேற்கு பிரதேச செயலக ஆயுள்வேத பாதுகாப்பு சபையின் ஒழுங்குபடுத்தலில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10மணிக்கு சங்கானை பிரதேச செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் யோகாசன தியான கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.
குறித்த பிரதேச செயலக ஆயுர்வேத பாதுகாப்பு சபைத் தலைவர் வெற்றிவேல் சக்திவேல் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வாழ்த்துரையை வலி. மேற்கு பிரதேச செயலர் கவிதா உதயகுமார் நிகழ்த்தவுள்ளார்.
இதையடுத்து இந்திய முதநிலைப் பேராசிரியர் கே. இரா.முனிரத்தினம் ‘மருத்துவ அறிவியல் நோக்கில் மனிதவள மேம்பாட்டில் யோகம் தியானம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுவார்.
இலவசமாக நடத்தப்படும் இக்கருத்தரங்கில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு பிரதேச செயலக ஆயுர்வேத பாதுகாப்பு சபையினர் கேட்டுள்ளனர்.


















