-கஜிந்தன்-
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் உள்ள பொருளாதார ரீதியாக நலிவுற்ற 10 மாணவர்களுக்கு இவ்வாறு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். இந்திய துணைத்தூதர் சாய் முரளி கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார், இந்திய துணைத் தூதரக அதிகாரி நாகராஜன், கிராம சேவகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


















