சட்டவிரோத உபகரணங்கள் : 8 படகுகள் மீட்பு!
-க.சபேஷன்-
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படை – பொலிஸ் அதிரடிப்படை இணைந்து கடந்த 8ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதிவரை நடத்திய சோதனை நடவடிக்கையில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து எட்டு டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. வடக்கு கடற்படை கட்டளையால் பருத்தித்துறை கடற்கரை மற்றும் கடல் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், யாழ்ப்பாண காவல்துறை சிறப்பு அதிரடிப் படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன.
மீன்பிடிப் படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர். இந்த நடவடிக்கைகளில் பிடிபட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி படகுகள் திருகோணமலை, ஈச்சலம்பத்துவ, குச்சவெளி, கோட்பே, யாழ்ப்பாணம் பருத்தி த்துறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் உள்ள மீன்வள அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.


















