-கஜிந்தன்-
யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திலக் தனபால கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதான சந்தேகநபர்கள் 4 பேரும், மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது பிரதான சந்தேகநபரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க பொலிஸார் விண்ணப்பம் செய்த நிலையில், நீதிமன்று அனுமதி வழங்கியிருந்தது. பொலிஸ் காவல் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மீண்டும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்க கூட்டிச் சென்றபோது. சந்தேகநபர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின்போது கடமையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களும் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


















