ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் – வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது.

அன்னதானக் கந்தன் எனப் போற்றப்படும் முருகப்பெருமான் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே ஏறிக் காட்சியளித்தார்.



















