-செ.ரவிசாந்-
சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இசை அரங்க நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக உத்தியோகத்தர் பாலச்சந்திரன் யாழினி அணிசெய் கலைஞர்களுடன் இணைந்து இசை அரங்க நிகழ்வினை நடத்தினார்.
இந்நிகழ்வையடுத்து கோரிக்கைக்கு அமைவாக இசைக்கருவிகள் திருத்தச் செலவுகளுக்காக 26 ஆயிரம் ரூபா நிதியதவி பன்னாலை கணேசா அறநெறிப் பாடசாலை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.


















