-த.சுபேசன்-
தென்மராட்சி – கொடிகாமம் நகரில் ஏ9 வீதியில் உள்ள சமிக்ஞை விளக்குப் பகுதியில் வைத்து பேருந்துகள் பயணிகளை இறக்குவதனால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயநிலை காணப்படுவதாக சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர் செ.மயூரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் சாவகச்சேரிப் பிரதேசசபையில் அண்மையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வில் அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
கொடிகாமம் நகர் பகுதியில் உள்ள சமிக்ஞை விளக்குப் பகுதியில் பேருந்துகள் சமிக்ஞை விளக்கின் சைகைக்காக நிறுத்துகின்ற வேளை பயணிகள் இறங்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பாரிய விபத்துக்கள்,உயிர்ச்சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே மேற்படி ஆபத்தான இடத்தில் பயணிகளை இறங்க அனுமதிக்காது அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்குமாறு அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றார்.


















