-கஜிந்தன்-
யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக பொன்னம்பலம் ஸ்ரீீவர்ணன் நேற்றுமுன்தினம் தனது யாழ். மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தனது நியமனக் கடிதத்தினை பொன்னம்பலம் ஸ்ரீீவர்ணன் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் பெற்றுக் கொண்ட நிலையிலேயே தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் வடக்கு மாகாண சபையின் சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகவும் ,வடக்கு மாகாண பிராந்திய உள்ளுாராட்சி உதவி ஆணையாளராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















