-த.சுபேசன்-
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்கு உட்பட்ட சாவகச்சேரிப் பொது நூலகத்தின் இவ்வாண்டுக்கான தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா மற்றும் நகர மஞ்சரி இரண்டாவது இதழ் வெளியீட்டு என்பன கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
வாசிப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் காலை 9மணிக்கு சாவகச்சேரி பேருந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பமான நடைபவணி நகரசபையின் பொன்விழா மண்டபத்தை வந்தடைந்ததையடுத்து விழா நிகழ்வுகள் நடைபெற்றன.
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக யாழ்.பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தி. பா. பார்த்திபனும், சிறப்பு விருந்தினராக தென்மராட்சி பிரதிக் கல்வி பணிப்பாளர் ப. பரணிதரனும் -(தமிழ் துறை) கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வெற்றி பெற்றோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் நகர மஞ்சரியின் இரண்டாவது இதழ் வெளியீட்டும் இடம்பெற்றது.


















